களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம்… பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை சாப்பிட்டும் பொதுமக்கள் மகிழ்ச்சி..!!
Author: Babu Lakshmanan4 November 2021, 8:27 am
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று களைகட்டியுள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தலால் சுமார் 2 ஆண்டுகளாக தளவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையானது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. ஆனால், ஊரடங்கு காரணமாக, பொருளாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு தீபாவளியானது சீறும், சிறப்புமாக அமையவில்லை. ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்த நிலையில், பெரும்பாலான தளர்வுகளை அறிவித்து, பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தமிழக அரசு வழிவகுத்துள்ளது.
மேலும், இழந்த பொருளாதாரம் மீண்டும் கைகூடிய நிலையில், தீபாவளியை பொதுமக்கள் உற்சாகமாகத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், காற்று மாசுபாடு காரணமாக, காலை, மாலை தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் எழுந்தவுடன் எண்ணெய் குளியல் போட்டு, புத்தாடைகளை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடித்தும், தீபாவளியை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
0
0