தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு : எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம் என தெரியுமா..?

5 November 2020, 3:44 pm
diwalii celebration - updatenews360
Quick Share

சென்னை : தீபாவளி பண்டிக்கைக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறி டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை வெடிக்கத் தடை விதிக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தமிழகம், ஆந்திரா, அஸ்ஸாம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 18 மாநில தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதனிடையே, ராஜஸ்தான், ஒடிசா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநில அரசுகள் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதித்திருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் தீபாவளியை கொண்டாட அனுமதியளிக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டை போலவே, தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 19

0

0