நெருங்கி வரும் சட்டப்பேரவை தேர்தல் : செலவின பார்வையாளர்கள் இன்று சென்னை வருகை!!

8 March 2021, 12:48 pm
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான செலவின பார்வையாளர்கள் இன்று மாலை சென்னை வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கண்காணித்து வருகிறது.

மேலும், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் உள்பட எந்தவித இலவசமும் கொடுக்கப்படாதவாறு, பறக்கும் படைகளை ஏற்படுத்தி கண்காணிக்கிறது. இதற்காக வாகன சோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட மதுமகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று மாலை விமானம் மூலம் சென்னை வருகின்றனர்.

Views: - 7

0

0