பணம் எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடு : தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது

26 February 2021, 7:48 pm
sathyapratha sahoo - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். மேலும், வரும் மார்ச் 12ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கலும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது :- தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் 6,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 50,000 ரூபாய்க்கு கூடுதலான தொகையை எடுத்துச் சென்றால், ஆவணங்களை காண்பிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்கப்படும்.
பணப்பட்டுவாடா புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மாவட்ட மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், செலவின குழுவினருக்கான பயிற்சி மார்ச்சில் தொடங்குகிறது, எனக் கூறினார்.

Views: - 72

0

0