தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் முறை அறிமுகம் : எங்கெல்லாம் சென்று வர இ-பாஸ் அவசியம்..?
7 March 2021, 6:09 pmசென்னை : தமிழகத்திற்கு வருபவர்களில் யாருக்கெல்லாம் இ-பாஸ் தேவை என்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சில குறிப்பிட்ட மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதாவது, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக ரீதியான பயணமாக 3 நாட்களுக்கும் குறைவாக பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0