ரூ. 12,000 கோடி விவசாய பயிர் கடன் தள்ளுபடி… அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி..!!

5 February 2021, 12:40 pm
Farmers CM - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது :- 2019-20 நிதியாண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தை தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்களினாலும் விவசாயிகளும், விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புகளை கணக்கீடு செய்ய மத்திய குழு தமிழகத்திற்கு வந்த நிலையில், மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல் தமிழக அரசு ரூ. 1,717 கோடியை ஒதுக்கீடு செய்தது.

எனவே, வாழ்வாதாரம் பாதித்த நிலையில் இருக்கும் விவசாயிகளின் துயரை துடைக்கும் வகையில், தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.12,110 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அரசாணை வெளியிடப்படும், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 2

0

0