ரூ.1000 இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு… தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு ; பொதுமக்கள் அதிருப்தி…!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 8:40 am
Quick Share

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, பச்சரிசியை கிலோவுக்கு ரூ.32ம், சர்க்கரையை கிலோவுக்கு ரூ.40ம், முழு கரும்புக்கு ரூ.33ம் கொடுத்து கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 கோடியே 19 லட்ச ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்தப் பரிசு தொகுப்புகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பரிசு தொகுப்பில் ரொக்கப்பரிசு இல்லாமல் அறிவிப்பு வெளியாகியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 294

0

0