கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி!!

11 September 2020, 12:07 pm
thiru vk college
Quick Share

சென்னை : கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- 2019-20-ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு அதிகளவில்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்ட நிலையில்‌, அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும்‌ மற்றும்‌ அறிவியல்‌ பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாகவும்‌ மாணவ / மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தும்‌ இக்கூடுதல்‌ மாணவர்கள்‌ சேர்க்கைக்கு, சார்ந்த பல்கலைக்கழகங்களின்‌ அனுமதி பெற வேண்டும்‌ எனவும்‌ ஆணைகள்‌ வெளியிடப்பட்டது.

கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌ அரசு கலை மற்றும்‌ .அுறிவியல்‌ கல்லூரிகளுக்கு அருகாமையிலுள்ள / சுற்றியுள்ள
பெரும்பாலான கிராமங்களிலிருந்தும்‌ நகராட்சியிலிருந்தும்‌ பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவ / மாணவிகள்‌ அரசு கல்லூரிகளில்‌ அதிகளவில்‌ கல்வி பயில விண்ணப்பித்துள்ளனர்‌ என்றும்‌, இம்மாணவ மாணவிகள்‌ அதிக கல்விக்‌ கட்டணம்‌ செலுத்தி தனியார்‌ மற்றும்‌ சுயநிதி கல்லூரிகளில்‌ கல்வி பயில மிகவும்‌ சிரமப்படுகின்றனர்‌ என்றும்‌, மேலும்‌ அரசு கல்லூரிகளில்‌ 2020-21-ஆம்‌ கல்வியாண்டிற்கு மாணவர்‌ சேர்க்கைக்கு அதிக அளவில்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டுள்ளதால்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளுக்கு மாணவ மாணவியர்களின்‌ நலன்‌ கருதி 2020-21-ஆம்‌ கல்வியாண்டில்‌ கூடுதலாக தேவையுள்ள பாடப்பிரிவுகளில்‌ கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும்‌ அறிவியல்‌ பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாகவும்‌, மாணவ மாணவியர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரசைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

கல்லூரிக்‌ கல்வி இயக்குநரின்‌ கருத்துருவை பரிசீலித்த அரசு, 2020-21-ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ மாணவ மாணவியர்கள்‌ சேர்க்கைக்கு அதிகளவில்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டுள்ள நிலையில்‌, அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ இக்கல்வியாண்டிற்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும்‌ அறிவியல்‌ பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாகவும்‌ மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது. இக்கூடுதல்‌ மாணவர்கள்‌ சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின்‌ அனுமதி பெற வேண்டும்‌ எனவும்‌ அரசு ஆணையிடுகிறது, எனக் கூறப்பட்டுள்ளது.

Views: - 0

0

0