உணவகங்களில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி..! எந்தெந்த நேரங்களில் தெரியுமா..?

5 September 2020, 7:40 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் இருக்கும் ஏசியை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மையுடைய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, கடைகள், உணவகங்கள், ஷோரும்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 4வது கட்ட தளர்வுகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு படிப்படியாக மேலும் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து உணவகங்களில் ஏசியை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், மத்திய அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு முறைகளில் குறிப்பிட்டிருக்கும் அளவில் மட்டுமே ஏ.சியை பயன்படுத்த வேண்டும் என்றும், உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே ஏசியை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Views: - 0

0

0