ரிஸ்க் எடுத்து வேல செய்றோம்… அதிமுக அரசின் ரூ.50 லட்சத்தயும் ரூ.25 லட்சமாக குறைச்சிட்டாரு.. ஸ்டாலின் மீது மருத்துவர்கள் அதிருப்தி..!!

14 May 2021, 6:03 pm
Eps - stalin - updatenews360
Quick Share

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டது. இதனால், மார்ச் 20ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டனர். சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது, மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், ஒரே மருத்துவர் 3 ஷிப்டுகளையும் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Corona TN - Updatenews360

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களின் பங்கு மகத்தானது. தனது உயிரையும், குடும்பத்தினரையும் பிரிந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வந்தனர். இதனல், அவர்கள் வீடுளுக்கு சென்றால், குடும்ப உறுப்பினர்களையும் கொரோனா தொற்றும் அபாயம் இருப்பதை உணர்ந்து, அவர்கள் அரசு ஏற்பாடு செய்த விடுதிகளில் தங்கி சேவையை ஆற்றி வந்தனர்.

இதுபோன்ற பேரிடர் காலத்தில் தொடர்ந்து மருத்துவ பணியில் ஈடுபட்ட வந்த மருத்துவர்கள், பணியின் போது, தொற்றி பாதித்து உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வந்தன.

எனவே, மருத்துவர்களின் அளப்பரியாத இந்த சேவையை கவுரவிக்கும் விதமாக, பணியின் போது இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், அப்போதைய எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின், மருத்துவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் போதாது… ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.

இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அப்போது, பணியின் போது உயிரிழந்த 43 மருத்துவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினரும், கடந்த ஆண்டு ஸ்டாலின் வலியுறுத்தியதை போன்று, ரூ.1 கோடி வழங்குவார் என எதிர்பார்த்திருந்தனர்.

Cm stalin - updatenews360

ஆனால், உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்தியது.

முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பினால் ஏமாற்றமும் அடைந்த உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினர், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்காவிட்டாலும் பரவாயில்லை, அதிமுக அரசு வழங்கி வந்த ரூ.50 லட்சத்தை, ரூ.25 லட்சமாக குறைத்து வழங்கியிருப்பது எந்தவித நியாயம் என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

Views: - 387

1

0