எடப்பாடியார் அரசின் கடைசிக் கூட்டத் தொடர் மாலை மீண்டும் கூடுகிறது : முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!!!
26 February 2021, 2:16 pmசட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க உள்ள நிலையில், தமிழக அரசின் கடைசி கூட்டத் தொடர் இன்று மீண்டும் கூடுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 4.30 மணியளவில் அறிவிக்கிறது.
இதனிடையே, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சந்திக்கிறார்.
இந்த நிலையில், தமிழக அரசின் கடைசி கூட்டத் தொடர் இன்று மீண்டும் கூடுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட இருப்பதால், இந்த சந்திப்பின் போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
0