மே 17ம் தேதிக்கு பிறகு இ-பாஸ் தேவையில்லை.. ஆனா.. : தமிழக அரசின் புதிய தளர்வு பற்றி தெரியுமா..?

16 May 2021, 6:20 pm
Quick Share

சென்னை : மே 17ம் தேதிக்கு பிறகு மாவட்டத்திற்குள்ளேயும், வேறு மாவட்டங்களுக்கு சென்று வருவதற்கும் இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10ம் தேதி முதல் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுவதற்கு இ-பாஸ் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால், அவரச தேவைகளுக்கு செல்பவர்கள் இ-பாஸ் விண்ணப்பித்த்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், 17ம் தேதிக்கு பிறகு இ-பாஸ் அவசியமில்லை என்றும், இ-பதிவு செய்தால் மட்டும் போதுமானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது, மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி பரப்பப்படுவதாகவும், பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 317

0

0