ரூ.12,110.74 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!!

8 February 2021, 9:15 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்த ரூ.12,110.74 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கடந்த 5ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி ஆற்றிய உரையில் கூட்டுறவு வங்கிகளில்‌ பயிர்க்கடன்‌ பெற்ற 16.43
இலட்சம்‌ விவசாயிகளின்‌ கடன்‌ நிலுவைத்‌ தொகையான 12,110 கோடி ரூபாய்‌ தள்ளுபடி
செய்யப்படும்‌ என அறிவித்தார்‌.

முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பினை நிறைவேற்றும்‌ பொருட்டு, கடந்த 31ம் தேதியுடன் நிலுவையில்‌ உள்ள 16,43,347 விவசாயிகளின்‌ ரூ.12,110.74 கோடி பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த தேவையான நிதி அரசால்‌ கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும்‌. இத்திட்ட செயலாக்கம்‌ தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌ தனியே வெளியிடப்படும்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0