ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
5 February 2021, 3:33 pmசென்னை : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீசார் மீது தாக்குதல் நடத்தியது, வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளை தவிர்த்து, பிற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும், எனக் கூறினார்.
கடந்த 2017ம் ஆண்டு சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், திடீர் வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
0
0