தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு..!! (தளர்வுகளின் முழு விபரம்)

11 June 2021, 7:22 pm
Lockdown_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருப்பினும் சராசரியாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இருந்து வருகின்றன. எனவே, கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஊரடங்கை மேலும் ஒரு வாரம் காலம், அதாவது ஜுன் 21ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் சில தளர்வுகளும், கொரோனா தொற்று பரவல் சற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களை தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளின் விபரம் பின்வருமாறு..!!.

அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 % வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதி. காலை 6 மணி முதல்‌ மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

அரசு பூங்காக்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள பூங்காக்கள்‌, விளையாட்டு திடல்களில்‌ காலை 6 மணி முதல்‌ காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும்‌ அனுமதி

வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல காலை 9 மணி முதல்‌ மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை செயல்பட அனுமதி

மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6 மணி முதல்‌ மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை செயல்பட அனுமதி

டாஸ்மாக்‌ கடைகள்‌ காலை 10 மணி முதல்‌ மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை செயல்பட அனுமதி

கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை செயல்பட அனுமதி

மிக்ஸி, கிரைண்டர்‌, டி.வி. பிரிட்ஜ்‌ உள்ளிட்ட வீட்டு உபயோகப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை செயல்பட அனுமதி

பள்ளி, கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிர்வாகப்‌ பணிகள்‌ அனுமதி

ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 50 % பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதி

இதர தொழிற்சாலைகளும்‌ 33 % பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதி

தொழிற்சாலைகளில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்கள்‌‌ தங்களது இரு சக்கர வாகனங்களிலும்‌ இ- பதிவு மற்றும்‌ தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன்‌ பணிக்கு சென்று வர அனுமதி

தகவல்‌ தொழில்நுட்பம்‌ / தகவல்‌ தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில்‌ 20 % பணியாளர்கள்‌ அல்லது 10 நபர்கள்‌ மட்டும்‌ பணிபுரிய அனுமதி, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 185

3

2

Leave a Reply