தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா ரேசன் கடைகள் : 21ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி தொடங்கி வைக்கிறார்

19 September 2020, 1:50 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா ரேசன் கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 21ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் விதமாக, ரூ.9.66 கோடி மதிப்பில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் துவக்கப்படும், எனத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரியான எடையில் தரமான உணவுப் பொருட்கள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இந்த நோக்கம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வாகனங்களின் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் இந்த திட்டத்தை வரும் 3,501 நகரும் அம்மா ரேசன் கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 21ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

Views: - 5

0

0