வெறிச்சொடிய சாலைகள்… கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவுநேர ஊரடங்கு …!!

Author: Babu Lakshmanan
6 January 2022, 10:58 pm
Quick Share

சென்னை : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை அடுத்து தமிழகம் முழுவதும் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமை நாட்களில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஊரடங்கை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரம் என்றாலும் பரபரப்பாக காணப்படும் நகரின் முக்கிய வீதிகள் இன்று முழுமையாக முடங்கிக் கிடக்கின்றன.

Views: - 392

0

0