அரசின் மேம்பாட்டு நடவடிக்கையால் தமிழகத்தில் உயரும் பொருளாதாரம் : டிராக்டர் விற்பனை இருமடங்கு அதிகரிப்பு

12 October 2020, 8:12 pm
Cm palanisamy tractor - updatenews360
Quick Share

சென்னை: கொரோனாவுக்குப் பிறகு தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருவதைக்காட்டும் இன்னொரு அறிகுறியாக மாநிலத்தில் வாகன விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையையோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டும் செப்டம்பர் மாத விற்பனை 17.18 சதவீதம் அதிகரித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், தமிழக விவசாயிகள் வளமாக இருப்பதை டிராக்டர் விற்பனை இரு மடங்காக உயர்ந்தது எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யும் விதத்தில் அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இதையே வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாகப் பேசுவோம் என்று கூறிவருகிறார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று ‘ப்ரொஜெக்ட் டுடே’ போன்ற நடுநிலையான வர்த்தகப் புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் கூறிவரும் சூழலிலும் இதுவரை ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளைப் பற்றி வெள்ளை அறிக்கை கேட்டு வருகிறார்.

Stalin DMK- updatenews360

இந்தியாவிலேயே கொரோனாப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருந்தததால் மற்ற மாநிலங்களைவிட மிகவும் தாமதமாகவும் மிகுந்த எச்சரிக்கையுடனும் தமிழ்நாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பல்வேறு தளர்வுகளை முதல்வர் பழனிசாமி அறிவித்து தொழில் வர்த்தக நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளார். அதிமுக அரசின் நடவடிக்கைகள் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தி வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இருக்கின்றன.

கடந்த 2019 செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் 1,45,216 வாகனங்கள் விற்பனை ஆகிய நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனை 1,70,160 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 17.18 சதவீதம் அதிகமாகும். 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,938 டிராக்டர்களே விற்பனையானது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3,731 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 92.52 சதவீத ஏற்றமாகும்.

Tractor_ updatenews360

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், தமிழக விவசாயிகள் வளமாக இருப்பதையே டிராக்டர் விற்பனையின் இரு மடங்கு உயர்வு எடுத்துக் காட்டுகிறது .2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 1,20,117 எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்கள் விற்றன. இந்த ஆண்டு செப்டம்பரில் அந்த எண்ணிக்கை 1,43,990 என்று அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 19.87 சதவீதம் அதிகமாகும். நடுத்தர மக்களின் பொருளாதாரமும் உயரத் தொடங்கிருப்பதையே காட்டுகிறது.

அடுத்த 2021-ஆம் ஆண்டில்தான் இந்தியா பொருளாதார வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரே கூறியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வாகன விற்பனை இந்த ஆண்டே வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பியுள்ளது. இது தேசிய அளவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் விரைவாக பொருளாதாரத்தில் மீண்டுவருவதையே காட்டுகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி சிறப்பாக இருப்பதையே இது தெளிவாக்குகிறது.

ஏற்கனவே, தமிழ்நாடு தொழில் முதலீட்டில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் பெருகிவரும் வாகன விற்பனையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது. வாகன விற்பனை என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் குறியீடாகக் கருதப்படுகிறது. இது மக்களிடம் வாங்கும் சக்தியும் பணப்புழக்கமும் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. தொடர்ந்து விற்பனை உயரும்போது உற்பத்தியும் உயர்த்தப்பட வேண்டிய தேவை ஏற்படும். பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். விற்பனையே உற்பத்தியை இயக்கும் முக்கிய காரணியாகும்.

edappadi palanisamy - updatenews360

சமூகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும் உணவில்லை என்று ஏழைகள் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்று இலவசத் திட்டங்களையும் ஆயிரம் ரூபாயையும் கொடுத்த அதிமுக அரசு நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்களையும் தொலைநோக்குப் பொருளாதார நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என்பதை வாகன விற்பனையின் கிடுகிடு உயர்வு எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்து பல்வேறு தொழில்களிலும் வர்த்தகத்திலும் இருப்பவர்கள் நல்ல வருமானம் பெறுவதையே வாகன விற்பனை உயர்ந்துள்ளது வெளிப்படுத்துகிறது. மக்கள் வாங்கும் சக்தி அதிகரித்து உயர்ந்திருப்பதும் பணப்புழக்கம் கூடியிருப்பதும் வளமான நிலை நோக்கித் தமிழ்நாடு விரைவாகவும் உறுதியாகவும் நடைபோடுகிறது என்பதேயே வாகன விற்பனை பற்றிய அறிக்கை துல்லியமாகப் படம்பிடிக்கிறது. வரும் திருவிழாக் காலங்களில் தமிழ்நாட்டில் வாகன விற்பனை இன்னும் வேகமெடுக்கும் என்றும் பொருளாதார வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 41

0

0