தினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…!!!

6 March 2021, 8:38 pm
sasikala - dinakaran - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, தொகுதி பங்கீட்டை நடத்தி வருகின்றன. அதேவேளையில், பாஜகவின் துணையுடன் அதிமுக கூட்டணியில் சேர்ந்து விடலாம் என்னும் தினகரனின் எண்ணமும் தற்போது தவிடுபொடியாகிவிட்டது.

எனவே, தொகுதி பங்கீட்டில் முரண்பாடு ஏற்பட்ட கட்சிகளை சேர்த்து 3வது அணியை அமைக்கும் முனைப்பில் டிடிவி தினகரனும் இருந்து வருகின்றார். அதேவேளையில், தற்போது வலுவான 3 அணியாக இருக்கும் கமல்ஹாசனுடன் சேர்ந்து விடலாம் என டிடிவி தினகரன் நினைத்தார். மேலும், கமலுடன் கூட்டணி வைத்தால் கணிசமான ஓட்டுக்களை பெற்று சட்டசபையை மீண்டும் மிதிக்கலாம் என கணக்கு போட்டார்.

அதேசமயம், அமமுக தனித்து போட்டியிடுவதை சசிகலா விரும்பவில்லை. தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்து விட்டால், தற்போது இருக்கும் ஆதரவும் பிறகு கிடைக்காது என்பது சசிகலாவின் எண்ணமாக இருந்து வருகிறது. எனவே, அவர் அரசியலுக்கு முழுக்கு போட்டதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவில் உள்ள முக்குலத்தோர் வாக்குகள் நம்மால் சிதறிப்போனால், நமது சமுதாயத்தினரின் தோல்விக்கும், சாபத்திற்கும் ஆளாகி விடுவோம் என்றும் சசிகலாவின் சிந்தனை ஓட்டமாக இருக்கிறது. எனவே, அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளார்.

ஆனால், அதிமுகவின் வெற்றியை தடுத்தாலே, நமக்கான செல்வாக்கை உயர்த்திவிடலாம் என்பது தினகரனின் கணக்காக இருந்து வருகிறது.

Views: - 1

0

0