வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்பு… வகுப்பில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு..!!

Author: Babu Lakshmanan
27 August 2021, 1:56 pm
Delhi School - Updatenews360
Quick Share

தமிழகத்தில் செப்.,1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், வரும் செப்.,1ம் தேதியில் இருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரையில் 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதாவது, வகுப்பில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் நடைபெறும்.

மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்கப்படும்.

அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும்.

மாணவர்கள் பள்ளி வளாகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும்.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது.

பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டங்கள் ஆகியவை நடத்தப்படுதல் கூடாது.

பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 262

0

0