‘இறப்பு தன்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன்’: ரஜினியின் வழியில் அரசியலில் இருந்து விலகிய பிரபலம்..!!

Author: Aarthi
30 December 2020, 8:33 am
Quick Share

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தாமும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவிருந்த கட்சியின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் தமிழருவி மணியன். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என உறுதியாக கூறி வந்த தமிழருவி மணியனுக்கு, ரஜினியின் நேற்றைய அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரஜினிகாந்துக்காக கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆலோசனைகள் கூறி வந்த தமிழருவி மணியன், ரஜினிகாந்த் தொடங்கவிருந்த கட்சிக்கு கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது உடல்நிலையை காரணமாக கூறி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற அறிவிப்பை ரஜினி நேற்று வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து தாமும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழருவி மணியன். இறப்பு தன்னை தழுவும் வரை இனி எப்போதும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் வித்தியாசம் தெரியாத அரசியலில் இனி சாதிக்க தனக்கு ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார்.

திமுகவிலிருந்து கண்ணதாசன் விலகும் போது போய் வருகிறேன் எனக் கூறியதாகவும் ஆனால் தாம் அரசியலில் இருந்து போகிறேன்; இனி வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். நேர்மைக்கும், உண்மைக்கும் மதிப்பில்லை என்றும் எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் தாம் கையேந்தவில்லை எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

Views: - 42

0

0