டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்… மதுப்பிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கவனத்திற்கு…!!!

19 April 2021, 3:41 pm
Corona Tasmac - Updatenews360
Quick Share

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும், இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில், மதுபானக் கடைகளில் கடையின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை தமிழ்நாடு வாணிபக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதாவது,

  1. மதுபான சில்லறை விற்பனை கடைகளில்‌ எந்தவொரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது.
  2. இரண்டு வாடிக்கையாளர்களிடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்‌.
  3. ஒரேநேரத்தில்‌ கடையின்‌ உள்ளே 5 நபர்களுக்கு மேல்‌ இருக்கக்கூடாது.
  4. 4 அனைத்து மதுபான சிலைறை விற்பனை கடைகளிலும்‌ மேற்பார்வையாளர்கள்‌ பாதுகாப்பு உபகரணங்கள்‌ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்‌.
  5. கடைப்பணியாளர்கள் மூன்றடுக்கு முகமூடி முக்கவசம்‌,
    கையுறைகள்‌, மற்றும்‌ குறிப்பிட்ட கால இடைவெளியில்‌ கிருமிநாசினி திரவத்தை கட்டாயம்‌ பயன்படுத்தவேண்டும்‌.
  6. கடையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்‌, கடைப்பணியாளர்கள்‌ வேலைநேரத்தில்‌ கிருமிநாசினி திரவத்தை குறைந்தது 5 தடவைகள்‌ குறிப்பிட்ட கால இடைவெளியில்‌ பயன்படுத்தவேண்டும்‌.
  7. ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமிநாசினி திரவத்தை கொண்டு கடை சுத்தம் செய்வதுடன்,‌ கடையை சுற்றிலும். பிளீச்சிங் பவுடர்‌ தூவி சுத்தம்‌ செய்யவேண்டும்‌.
  8. குறைந்தது இரண்டு பணியாளர்கள்‌ கடையின்‌ வெளிப்புறம்‌ நின்று மதுபிரியர்களை சமூக
    இடைவெளியை பின்பற்றி வர செய்தும்‌, முகக்கவசம். அணிந்து வர செய்தும்‌ விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்‌.
  9. கடைப்பணியாளர்கள்‌ மதுப்பிரியர்களை கடையின்‌ அருகில்‌ மது அருந்த அனுமதிக்காமலும்‌, கடையில்‌ அதிக கூட்டம்‌ சேராமலும்‌, பொது இடங்களில்‌, மது அருந்துவதை தடை செய்தும்‌ பணிபுரிதல்‌ வேண்டும்
  10. முகக்கவசம்‌ அணிந்து வரும்‌ மதுப்பிரியர்களுக்கு மட்டும் மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும்.
  11. குறைந்தது 50 வட்டங்கள்‌ சமூக இடைவெளியை பின்பற்றுவதன் பொருட்டு கடையின் எதிரே வரையப்பட்டிருக்க வேண்டும்‌.
  12. விலைபட்டியல் ‌ வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும்‌
  13. 21 வயது நீரம்ப பெறாதவர்களுக்கு கண்டிப்பாக மதுபானம்‌ விற்பனை செய்தல்‌ கூடாது.
  14. எக்காரணம்‌ கொண்டும்‌ மதுபானங்களை மொத்த விற்பனை செய்தல்‌ கூடாது, உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Views: - 54

0

0