25ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் !!
23 August 2020, 3:34 pmசென்னை : பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வார இறுதி நாளில் தளர்வுகளற்ற ஊரடங்கு என்பதால், சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். நாளை மறுநாள் காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தங்களின் கோரிக்கைகளை எழுதிய அட்டையை அணிந்து ஒரு வாரம் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.