ஆசிரியைக்கு கொரோனா… வகுப்புகளை தொடரும் பள்ளி நிர்வாகம்.. மாணவர்களின் நலனில் அலட்சியமா..? விளாசும் பெற்றோர்கள்..!!

Author: Babu Lakshmanan
6 September 2021, 2:18 pm
School - updatenews360
Quick Share

கரூர் : கரூர் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே வகுப்பறைகளில் தொடர்ந்து பாடம் நடத்தும் பள்ளி நிர்வாகத்தினால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிடமங்கலம் பகுதியை அடுத்து அமைந்துள்ளது பொரணி அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு பணியாற்றும் முதுநிலை உயிரியல் ஆசிரியர் ஆதிலோகநாயகி என்ற ஆசிரியைக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வெள்ளியணையில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், பள்ளிக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று அதே வகுப்பறைகளில் மீண்டும் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கவில்லை.

ஆங்காங்கே தமிழக அளவில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பெற்றோர் உறுதி செய்தால், அந்த பள்ளிகள் மூடப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை அளிக்காமல், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஆசிரியை இருந்த அறையிலேயே மீண்டும் பாடம் நடத்தப்படுவது, அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், வகுப்புகளை நடத்துவதை குறியாகக் கொண்டு, மாணவர்களின் நலனை அலட்சியப்படுத்தக் கூடாது என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கரூர் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சீரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

Views: - 380

0

0