ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆசிரியர்கள் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

22 August 2020, 10:20 am
teachers day - updatenews360
Quick Share

சென்னை : ஆசிரியர் தினத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்.,5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சிறப்பு பிரிவில் 2 ஆசிரியர்கள் என 47 ஆசிரியர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் இருந்து சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.சி. சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்கு தேர்வான சென்னை அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, 32 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.