ரூ.84 கோடிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் திமுக அரசு… ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி ஒதுக்க முடியாதா..? பாஜக கேள்வி

Author: Babu Lakshmanan
7 October 2022, 6:09 pm
Quick Share

சென்னை : 84 கோடி ரூபாய்க்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் திமுக அரசால், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ஒதுக்க முடியாதா..? என்று பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிய 1,311 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பணிநீக்கத்தை வாபஸ் பெற்று, மீண்டும் தங்களுக்கு அதே கல்லூரிகளில் நிரந்தர பணி ஒதுக்க கோரியும் 300க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப பயிற்சி இயக்குனரக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விரிவுரையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கரு.நாகராஜன்:- திராவிட மாடல் அரசுக்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதா..?, சட்டப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் பண்ணுவது போல் தேர்தல் வாக்குறுதி வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

நான்கு முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களை, மறுபடியும் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறுகிறது அநியாயமானது. 153 தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது நிறைவேற்ற மாட்டீர்களா?. 84 கோடி ரூபாய்க்கு பேனாச்சின்னம் என்கிறீர்களே, ஆண்டுக்கு இரண்டு கோடி இவர்களுக்கு ஒதுக்க முடியாதா ?

டாக்டர், இன்ஜினியர் போன்றவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் இப்படி தரையில் உட்கார வேண்டுமா..?, எனக் கூறினார்.

தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக சொன்னதை செய்ய விரும்பவில்லை, என்று கூறினார்.

Views: - 406

0

0