அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல்கள் தற்காலிகமாக நிறுத்தம்

18 September 2020, 8:06 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பிறகு அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் முழு ஊழியர்களுடன் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசு பணியிடங்களில் பொது மாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து துறை துணைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும். இடமாறுதல் தேவை எனக் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே மாறுதல்கள் தற்போது வழங்கப்படும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.