முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்…

Author: Aarthi
13 October 2020, 8:21 am
dapadi mom - updatenews360
Quick Share

எடப்பாடி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவசாயிஅம்மாள் காலமானார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவசாயிஅம்மாள், தமிழக முதலமைச்சரின் தாயார். இவர், நேற்று இரவு சுமார் 12 மணியளவில், தனியார் மருத்துவமனையில் காலமானார்.

வயது முதிர்வு காரணமாக காலமான அவருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, கோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

கணவர் கருப்ப கவுண்டர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயார் காலமானர் தகவல் அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினார்.

முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயிஅம்மாளின் இறுதி ஊர்வலத்தில், தமிழக அமைச்சர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Views: - 52

0

0