திமுக ஆட்சியில் நீட் தேர்வின் முதல் பலி : பொறுப்பேற்குமா திமுக? உதயநிதி கூறுவது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2021, 7:51 pm
Neet Udhayanithi Stalin - Updatenews360
Quick Share

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் மருத்துவபடிப்புகளுக்கான நீட் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் மடிந்து வரும் சூழலில் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.

மருத்துவக்கனவில் இருந்த ஏழை மாணவி அனிதா தற்கொலை முதல் இன்று உயிர் நீத்த தனுஷ் வரை எத்தனையோ மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்து தமிழக அரியணையில் திமுக அமர்ந்துள்ளது. ஆனால் வாய் வார்த்தைக்காக வாக்குறுதி கொடுத்தது போல எதையும் கண்டுகொள்ளாமல் திமுக உள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவன் ஏற்கனவே 2 முறை தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் இன்று 3வது முறையாக தேர்வு எழுத உள்ள நிலையில் அச்சத்தில் தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாணவனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் வாக்குறுதி அளித்த திமுக தற்போது என்ன கூறப்போகிறது என்றும், பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மாணவர்களின் குழப்பத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவனின் இல்லத்திற்கு சென்ற திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்து 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் 14 மாணவர்க உயிரிழந்த நிலையில் தற்போது தனுஷ் உயிரிழந்துள்ளார் என உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசை நடத்துகின்ற அதிமுக கூடட்ணியான பாஜகவுக்கு நீட்டை ஒழிக்க மனமில்லை, அதை எதிர்த்து கேள்வி கேட்க துணிவற்ற திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் கழக அரசை குறை சொல்வது வெற்று அரசியல் மட்டுமே என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் மீண்டும் மீண்டும் அதிமுகவை குறை சொல்லும் உதயநிதி, அதிமுக ஆட்சியில் இருந்த போதும் குறை கூறிய உதயநிதி, தற்போது திமுக ஆட்சியில் ஒரு உயிர் பலியானதும் மீண்டும் அதிமுகவையே குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் பிரச்சனையில் அரசை மாறி மாறி குறை கூறிக்கொண்டிருப்பது வாடிக்கையாக இருந்து கொண்டே வருகிறது. ஒரு பக்கம் அதிமுகவும் மறு பக்கம் திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் மாணவர்கள் நடுவில் சிக்கி தவித்து வருகின்றனர்.

எத்தனை எத்தனை உயிர்கள் பலி வாங்கியுள்ளது இந்த நீட் தேர்வு.. ஆனால் அரசு சரியான நடவடிக்கை எடுக்க வில்லையே என நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர். திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் என்று கூறியிருந்த நிலையில் இன்று நீட் தேர்வு நாளை நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் போவதாக கூறியுள்ளது அனைவரிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 279

0

0