திடீரென 400 மீட்டர் உள்வாங்கிய கடல்: பீதியடைந்த சுற்றுலா பயணிகள்..புதுச்சேரியில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 5:09 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் திடீரென கடல் நீர் 400 மீட்டருக்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

சுனாமி பேரலையின் தாக்கம் மக்களிடத்தில் இருந்து இன்னும் போகவில்லை என்று கூறலாம். ஏனெனில், இயல்பாகவே கடலில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அதனால் மக்கள் அச்சமடைந்து விடுகின்றனர். மேலும் அடிக்கடி கடல் நீர் உள் வாங்கும்போதெல்லாம் அது சுனாமியாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகமும் சேர்ந்துவிடுகிறது.

இதுபோன்றதொரு நிகழ்வு இன்று புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது. சுமார் 400 மீட்டர் தூரம் வரை கடல் திடீரென உள்வாங்கியது. இதனால் மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டது. இதனால் கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சற்று நேரத்தில் சரியாயிடும் என்று காத்திருந்தும், நீண்ட நேரத்துக்கு கடல் உள்வாங்கியபடியே இருக்கவும், கரைக்கு பலர் திரும்பிவிட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 30 ஆண்டுகளுக்க முன்பு இருந்தது போலவே கடற்கரை மணற்பரப்புடன் தற்போது காட்சியளிக்கிறது. கடல் உள்வாங்கிய செய்தி அறிந்து, தலைமைச் செயலகம் அருகே உள்ள கடற்கரையில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

இதைபற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் முகத்துவாரம் தூர்வாரப்படுவதால் கடல் உள்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் மக்கள் மத்தியில் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை.

Views: - 263

0

0