திரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு

27 January 2021, 8:13 pm
theatre - updatenews360
Quick Share

டெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, ஊரடங்கையும் அடுத்தடுத்து நீடித்து வருகிறது. முன்பை விட தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிப்.,28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Views: - 0

0

0