சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள்…! முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை

2 August 2020, 11:38 am
Quick Share

சென்னை: சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை தியாகத்தை போற்றும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த தலைவா்கள் பிறந்த நாள், நினைவு நாட்களில் அவா்களது சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்வுகள் நடைபெறவில்லை. சில நாட்களுக்கு முன்பு தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு  தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந் நிலையில், சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை தியாகத்தை போற்றும் வகையில் அவரது நினைவு நாளில் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு வீர‌ர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதே போன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு, அமைச்சர்கள், ஆட்சியர்கள் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், உள்ளிட்டோர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.