பக்தர்கள் இன்றி திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது சூரசம்ஹாரம்!!

20 November 2020, 4:57 pm
thiruchendur murugan - updatenews360
Quick Share

நெல்லை : திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் 2வது படை வீடு எனப்படும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாக, இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதியளிக்கப்படுவதில்லை.

நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, திருச்செந்தூர் கடற்கரை முகப்பில் 300க்கு 300 சதுர அடியில் தகரங்களினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது சூரனை வதம் செய்யும் வேல், பூஜைகள் செய்யப்பட்டு சஷ்டி மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. உற்சவர் ஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில் சூரசம்ஹாரம் நடந்து வருகிறது.

Views: - 0

0

0