திருவள்ளுவர் கிறிஸ்தவரா…? திருமா., கிளப்பிய புதிய சர்ச்சை…! அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்!!

Author: Babu Lakshmanan
6 November 2021, 6:40 pm
thiruvalluvar - vck 1- updatenews360
Quick Share

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவ்வப்போது, ஏதாவது, சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசி அதை பொதுவெளியில் பெரும் விவாதப் பொருளாகவும் மாற்றிவிடுவார்.

சர்ச்சை திருமா..,

2019-ம் ஆண்டின் இறுதியில், “குவி மாடமாக இருந்தால் மசூதி. கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம். அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோவில் “என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்

Thirumavlavan- updatenews360 (18)-Recovered

கடந்த அக்டோபர் மாதம், புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் மாநாட்டில் “இந்துக்களின் மனு தர்மம் இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்று கூறுகிறது” என்று பேசி இன்னொரு சர்ச்சையை கிளப்பினார். அதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் விசிகவின் நட்பு கட்சிகள் ஒன்றுகூட திருமாவளவனின் கருத்தை கண்டிக்கவில்லை.

அவர் அடிக்கடி இப்படி பேசுவது வழக்கம்தானே இதில் என்ன இருக்கிறது என்று கருதி கண்டனம் தெரிவிக்காமல் விட்டுவிட்டார்கள், போலிருக்கிறது!

அதன்பிறகு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்துவிட்டதால் இதுபோல் பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொண்டார்.

திருவள்ளுவர்

இந்த நிலையில்தான், இரு தினங்களுக்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இசிஐ இறையியல் கல்லூரியில் ‘திருக்குறள் உண்மை உரையும், வரலாற்று ஆதாரங்களும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

இதில் திருமாவளவன் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் ,”வள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகிறார்கள். சமீபத்திய காலத்து புள்ளிவிவரம் சைவமும் வைணவமும் ஆரிய மதம் அல்ல என்று கூறுகிறது.

இந்தியாவில் உள்ள 108 வைணவ கோவில்களில் 106 தமிழகத்தில் உள்ளது. பெரும்பாலான சைவக் கோவில்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. 63 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் தமிழர்கள். ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லி இருக்கின்றனர். மதங்களை உருவாக்கவில்லை.

தமிழர்கள், திராவிடர்களின் சமயம்தான் சைவ, வைணவ சமயங்கள், நம் மதங்களின் மீதான ஆக்கிரமிப்பில் இருந்து நாம் விடுபடவேண்டும்.

கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாத்திற்கும் எதிரான மத வெறுப்பு பிரச்சாரம் தற்போது நடைபெற்று வருகிறது. சனாதனத்தை எதிர்க்காமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. அதற்கு திருக்குறளும் ஆயுதமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக திகழும்” என்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர். அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை எழுதியுள்ளார் என்கிற நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்குரியது” என்றும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக திருமாவளவன் பேசிய வீடியோ பதிவு ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவருடைய இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சுகளின் ஏஜெண்ட்

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். “சூப்பர்! தலித் போர்வையில்
அதன் லாபங்களை அனுபவித்து வரும் மதம் மாற்றம் செய்யும் சர்ச்சுகளின் ஏஜெண்ட். இந்து பெயரில் திரியும் மதம் மாறிய கிறிஸ்தவர் நீங்கள். ஒப்புக்கொண்டால் MP
பதவி போய்விடும் என்பதால் மௌனமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதற்கு முன்புவரை திருமாவளவன், இந்துக்களை மட்டுமே குறிவைத்து தாக்கி பேசி வந்திருக்கிறார் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் தற்போது உலக பொதுமறை நூல்களில் ஒன்றான குறளை எழுதிய திருவள்ளுவரையே விவாதப் பொருளாகி இருக்கிறார்.

திருமாவளவன், சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் என்ன பேசினார் என்பது
குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

திருவள்ளுவர் எந்த மதம்.?

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “திருமாவளவன் இந்தப் புத்தகத்தை முழுமையாக படிக்கவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். முன் பகுதியில் சில பக்கங்களும் பின்பகுதியில் சில பக்கங்களும் மட்டுமே அவர் படித்துள்ளார். ஆனால் அதை வைத்தே புத்தகத்தை மதிப்பீடு செய்கிறார்.

கபாலீஸ்வரர் என்பது இயேசுநாதரைத்தான் குறிக்கும் என்று இந்த புத்தகத்தில் கூறப்பட்டு
உள்ளதாகவும் அவர் சொல்கிறார். குறிப்பாக திருமாவளவன் தன்னுடைய கருத்தாக எதையும் சொன்ன மாதிரி தெரியவில்லை. நூலாசிரியர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். இந்த நூலில் அப்படி சொல்லப்பட்டு இருக்கிறது, வாதம் வைக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்கிறார். ஒரு புத்தகத்தை முழுமையாக படிக்காமல் செய்வது எப்படி அதன்மீதான மதிப்பீடாகவும் விமர்சனமாகவும் இருக்க முடியும்?…

அவர் இப்படி சொல்வதை பார்த்தால் ஜிஎஸ்டி பற்றி தெரிந்து கொள்ளாமலேயே, அது குறித்து அண்மையில் ஒரு பிரபல டிவி சேனலுக்கு பேட்டி அளித்து அசடு வழிந்ததுதான் நினைவிற்கு வருகிறது.

அதனால்தான் திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர். அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறளை எழுதியுள்ளார் என்கிற நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்கு உரியது
என்று நூலாசிரியரின் பக்கமாக கையை காட்டி விடுகிறார்.

திருக்குறளை கிறிஸ்தவர்கள் கையில் ஏந்தவேண்டும் என்று திருமாவளவன் சொல்கிறார். இதை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?. ஏனென்றால் பைபிளைத்தான் அவர்கள் இதுவரை தங்களின் வேத நூலாக படித்து வருகிறார்கள். எனவேதான் 2-வது மறையாக அவர்கள் திருக்குறளை ஏற்பார்களா?… என்ற கேள்வி எழுகிறது.

திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்ற பிறகுதான் திருக்குறளை எழுதினார் என்றால், ஞானஸ்தானம் பெறுவதற்கு முன்பாக திருவள்ளுவர் எந்த மதத்தில் இருந்தார், அவருக்கு யார், எந்த மொழியில் எங்கு ஞானஸ்தானம் செய்து வைத்தனர்?…என்ற கேள்விகளும் எழுகின்றன.

திருக்குறள் வகுப்புகள்

ஏற்கனவே தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்துக் கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் எடுக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. அதனால் திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர்தான், இதை தமிழக அரசே ஒப்புக் கொண்டு இருக்கிறது என்ற வாதம் பலராலும் வைக்கப்பட்டு வருகிறது.

TN Secretariat- Updatenews360

தவிர, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது கி.மு. 31லிலேயே திருவள்ளுவர் பிறந்து விட்டதாக தமிழ் வரலாற்று ஆய்வுகள் தெள்ளத் தெளிவாக கூறுகின்றன. அதன் அடிப்படையில்தான் 2021-ம் வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2052 என தமிழ் அறிஞர்களால் எழுதப்படுகிறது, பேசப்படுகிறது. இப்போது திருமாவளவன், திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்கிறார். இதனால் குழப்பம்தான் வருகிறது.

அவர் இப்படி அடிக்கடி முரண்பாட்டுடன் சர்ச்சைக்குரிய விதத்தில் எதையாவது பேசுவது, சரியான அணுகுமுறை அல்ல. அது மத நல்லிணக்கத்திற்கு உதவுவதாகவும் அமையாது”
என்று கவலை தெரிவித்தனர்.

Views: - 784

0

0