தூத்துக்குடி எஸ்பி காத்திருப்போர் பட்டியலில் வைப்பு…! புதிய எஸ்பி ஜெயக்குமார்

30 June 2020, 1:28 pm
Quick Share

சென்னை: சாத்தான்குளம் சம்பவம் எதிரொலியாக தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் மாற்றப்பட்டனர்.

இந் நிலையில் தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஐியான சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெறுவதால் புதிய ஐ.ஜி.யாக எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஐி எஸ்.முருகன் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக இருந்து வந்தவர். முன்னதாக கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply