தமிழகத்தில் இன்று மேலும் 5860 பேருக்கு கொரோனா பாதிப்பு : பலியானோர் எண்ணிக்கை உயர்வு.!!

15 August 2020, 6:17 pm
Corona- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் (17வது நாளாக) 6 ஆயிரத்திற்கும் குறைவாகவே நீடித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று 5,860 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,179 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 127பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5,236 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 0

0

0