தமிழகத்தில் இன்று மேலும் 6,495 பேருக்கு கொரோனா : 94 பேர் பலி!!

30 August 2020, 8:13 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று 6,495 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6,406 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 83,250 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனி நபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 45,79,770 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 8

0

0