கடும் தாக்கம் ஏற்படுத்திய சுற்றுக்சூழல் வரைவு அறிக்கை..! ஆராய குழு அமைத்த தமிழக அரசு
14 August 2020, 10:00 pmசென்னை: மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசானது குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
ஆலைகள், திட்டங்கள் தொடங்க ஒப்புதல் அளிக்கும் முன்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியது.
அது தொடர்பான புதிய வரைவு அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்தது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 பெரும் விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள், சூழல் ஆய்வாளர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பல தரப்பினர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். ஆதரவு, எதிர்ப்பு என சமநிலையான கருத்துகள் வெளிப்படுகின்றன.
மார்ச் மாதம் இந்த வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மத்திய அரசும் இது குறித்து பல விளக்கங்களை அளித்துள்ளது. இந் நிலையில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
அதற்கான உத்தரவையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
12 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பொதுப்பணித்துறை தலைமை செயலாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பிடித்து இருக்கின்றனர்.