முதல்வருக்கு ஆதரவாக கொதித்தெழுந்த தமிழகம் : ஆ.ராசாவுக்கு முட்டுக் கொடுக்கும் திமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2021, 5:30 pm
DMK Raja -Updatenews360
Quick Share

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றியும், அவருடைய தாயார் குறித்தும் மிக மிக ஆபாசமாக பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு தமிழகம் முழுவதும் மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அதிமுக மகளிர் அணியினர் மட்டுமின்றி, அனைத்து பெண்கள் கூட்டமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் இழிவான பேச்சைக் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

DMK's A Raja compares Tamil Nadu CM EPS to MK Stalin's slipper, AIADMK  files complaint - Elections News

இந்த நூற்றாண்டில் இதுவரை தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் பேசாத அளவிற்கு அருவருக்கத்தக்க வகையில் ராசா அநாகரீகத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

அவருடைய பேச்சுக்கு நேரடியாக திமுகவோ, அதன் கூட்டணி கட்சித் தலைவர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை. ஆ.ராசாவின் பெயரைக் குறிப்பிட்டு கண்டிக்கவும் இல்லை.

DMK finalises seat sharing with Marxist Communist Party of India, allots 2  seats - DTNext.in

குறிப்பாக, பெண்களுக்காக உலகம் முழுவதும் குரல் கொடுக்கும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாயை மூடிக்கொண்டு ள்ளன. தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்தின் மனைவி பிருந்தா கூட இதை கண்டும் காணாமல் பதுங்கிவிட்டார்.

தமிழகமே கொந்தளித்து காணப்படும் நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் ராதிகா போன்றோர் எங்கே போனார்கள் என்பதும் தெரியவில்லை.

Premalatha Vijayakanth Wiki, Biography, Age, Caste, Images - News Bugz

அதேநேரம், சென்னையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆ.ராசாவுக்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்தார்.

எழும்பூரில் அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து பேசிய அவர், “முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அவருடைய தாயாரையும் மிகவும் தரம் தாழ்ந்து மோசமாக திமுக எம்பி ஆ.ராசா பேசியிருக்கிறார். ஒவ்வொரு தமிழ் சராசரி பெண்கள் மீதும் திமுக வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் இவ்வளவுதானா? என்ற கேள்வி எழுகிறது. இதை நினைவில் வைத்து வருகிற 6-ந் தேதி தேர்தலில் வாக்களியுங்கள்” என்று திமுகவை கடுமையாக சாடினார்.

Tamil detainees should be released from Andhra jails, says PMK's Ramadoss |  The News Minute

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமியின் மதிப்பு திமுக தலைவர் ஸ்டாலின் அணிந்துள்ள காலணியின் மதிப்பைவிட ஒரு ரூபாய் குறைவு. முந்தாநாள் வரை வெல்ல மண்டியில் வேலை செய்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு ஈடாக முடியாது என்றெல்லாம் அருவருப்பாக விமர்சித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அதன் உச்சமாக முதலமைச்சரின் பிறப்பையும், வழிபடத்தக்க வகையில் வாழ்ந்து மறைந்த அவருடைய தாயார் தவசாயி அம்மாளையும் இழிவுபடுத்தும் விதமாக வார்த்தைகளை கொட்டி இருக்கிறார். தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம்தான் திமுகவினரை இத்தகைய இழிவான தனிநபர் தாக்குதலில் ஈடுபட வைக்கிறது. இது அரசியல் நாகரீகம் அல்ல. ஆ.ராசாவின் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கடுமையாக கண்டிக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Karthikeya Sivasenapathy expresses regret for Leoni's distasteful comment  against women

இந்தநிலையில், “ஆ.ராசாவும் திண்டுக்கல் லியோனியும், தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களை கண்ணியக் குறைவான வகையில் பேசுவது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது. அவர்கள் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என்று அதிமுக தரப்பில் தமிழகத் தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Do you cook?': Watch DMK's Kanimozhi gently shut down this sexist question  | The News Minute

ஆ.ராசாவும், திண்டுக்கல் லியோனியும் பெண்களை அநாகரீகமாக பேசியது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி போலவே பொத்தாம் பொதுவாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “பிரச்சாரத்தில் ஈடுபடும் போது திமுகவினர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அத்தகைய பேச்சுகளை திமுக தலைமை ஒருபோதும் ஏற்காது. திமுகவினரின் பேச்சுகளை திரித்து, வெட்டி ஒட்டி தவறான பொருள்படும்படி செய்து திமுகவின் வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அடுத்த நிமிடமே கொந்தளித்து டுவிட் போடும் ஸ்டாலின், தனது கட்சியால் தமிழக மக்களுக்கு பிரச்சனை என்றதும் ஆற அமர
36 மணி நேரம் கழித்து அறிக்கை வெளியிடுகிறார். அதற்குள் இப்பிரச்சினை நீர்த்துப்போகும் என்று அவர் நினைத்திருப்பார், போலிருக்கிறது.

A. Raja threatens to go on hunger strike

விவகாரம் விஸ்வரூபம் எடுக்க வேறுவழியின்றி அறிக்கை வெளியிடும் நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

ஆ.ராசா தனது பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது “எனது பேச்சை தவறாக சித்தரித்து விட்டனர். இரண்டு மூன்று வரிகளை மட்டும் ஒட்டியும் வெட்டியும் எடுத்து நான் ஏதோ முதலமைச்சரை அவதூறாக பேசி விட்டேன் என்று சித்தரிக்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் அவரின் பிறப்பையும் கொச்சைப் படுத்திவிட்டேன் என்று பேசுவதுபோல் எடுத்து போடுவது முற்றிலும் தவறானது” என்று விளக்கம் தந்திருக்கிறார்.

ஆ ராசாவின் இந்த விளக்கம் தொடர்பாக சில கேள்விகளும் எழாமல் இல்லை. தனது பேச்சு வெட்டியும் ஒட்டியும் வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். அது உண்மை என்றால், தான் பேசிய வீடியோ பதிவை அவரே பொதுமக்கள் முன்பாகவோ, நடுநிலை தனியார் தொலைக்காட்சிகளிலோ வெளியிட்டு அதை நிரூபிக்க வேண்டும். மேலும் அப்படி வீடியோ வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியாக உடனே நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கவும் வேண்டும். சட்டம் பதித்துள்ள ராசா இதுதொடர்பாக கோர்ட்டிலும் உடனே வழக்கும் தொடரவும் வேண்டும். இவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக நடந்து கொண்டால்தான் அவர் மீது உண்மையிலேயே நம்பகத்தன்மை ஏற்படும்.

ஆனால் அவர் அதைச் செய்வாரா? என்பது சந்தேகம்தான். அந்த வீடியோ காட்சியை பார்ப்பவர்கள் அனைவருக்குமே அதில் எந்த வெட்டும் ஒட்டும் இல்லை என்பது புரியும். ஏனென்றால் அதிலுள்ள சொற்கோர்வை ஒவ்வொன்றும் முழுமையாக இருப்பதைக் காண முடிகிறது. ஒருவேளை அப்படியே வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ என்று கூட வைத்துக் கொள்வோம், அதில் உள்ள அருவருக்கத்தக்க வார்த்தைகள் உச்சரித்தது அவர்தானே? அதை அவரால் மறுக்க முடியாது என்பது உண்மை.

இதுபற்றி அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “குருவை மிஞ்சிய சிஷ்யர் என்பார்கள். அது ராசா விஷயத்தில் 100 சதவீதம் பொருந்தும். 1977-ல் மதுரை வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி திமுகவினரால் தாக்கப்பட்டு அவருடைய மண்டை உடைந்தது. அப்போது அதற்கு திமுக தலைவர் கருணாநிதி சொன்ன காரணம் மிகக் கேவலமானது. அந்த அளவுக்கு அருவருக்கத்தக்க வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.

A. Raja threatens to go on hunger strike

அது அப்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் தேசிய அளவில் அது கருணாநிதிக்கு பெரும் அவப்பெயரையும் ஏற்படுத்தியது. இப்போது ஆ.ராசா தன் குருவை விட ஒரு படிமேலே போய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து மிக அவதூறாக, அநாகரீகமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். இப்போது அப்படி பேசவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.

வழக்கமாக நான் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்று கூறி மறைமுகமாக சில அரசியல்வாதிகள் வருத்தம் தெரிவிப்பார்கள். மன்னிப்பும் கோருவார்கள். ஆனால் அந்த நாகரீகம் கூட ஆ.ராசாவிடம் இல்லை.

DMK regains citadel in city, wins all three LS constituencies - News Today  | First with the news

திமுகவினரும், திமுக அனுதாபிகளும் திமுக செய்யும் பெரிய பெரிய தவறுகளை ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அப்படியே பூசி மெழுகி விடுவது அவர்களுடைய வழக்கம்.
அதை பெரும் கௌரவ குறைச்சலாகவும் கருதுவார்கள். கருணாநிதி காலத்திலிருந்தே அப்படித்தான். ஸ்டாலினும் இப்போது தந்தையின் வழியைத்தான் பின்பற்றி இருக்கிறார். அவ்வளவுதான்.

MK Stalin files application to contest from Kolathur for third time | The  News Minute

ஆனால் தமிழக தாய்மார்கள் ஸ்டாலினின் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விடமாட்டார்கள். மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என்பது நிச்சயம்” என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுகவின் முக்கியத் தலைவர்கள் பேசி வருவது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Views: - 83

0

0