கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் அபராதம் : பொது சுகாதார சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!!

4 September 2020, 6:53 pm
TN Governor- Updatenews360
Quick Share

கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கும் வகையிலான பொது சுகாதார சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இருப்பினும், கொரோனா பாதிப்பு இன்னும் தீவிரமாக்கத்தான் இருந்து வருகிறது.

பொதுமக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தொற்றின் வீரியத்தை புரிந்து கொள்ளாத சிலர் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது. இருப்பினும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொதுசுகாதார சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்தது. மேலும், இந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் பொது சுகாதார அவசர சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

Views: - 6

0

0