நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி… நாளை வேட்புமனு பரிசீலனை..!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2024, 8:31 am
nomination
Quick Share

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி… நாளை வேட்புமனு பரிசீலனை..!!

கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்த அளவில், 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது. மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் களம் காண்கின்றன.

அதிமுகவை பொறுத்த அளவில், 7 தொகுதிகளை தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி 33 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது.

பாஜகவை பொறுத்த அளவில், மத்திய சென்னை, பொள்ளாச்சி, தென்காசி, தஞ்சாவூர் என 4 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது. இந்த தேர்தலில் திமுக vs அதிமுக vs பாஜக vs நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுவதால் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. பங்குனி உத்திரமான நேற்று முன் தினம் மட்டும் 405 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி உட்பட நேற்று 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. அதேபோல, மார்ச் 30ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

Views: - 131

0

0