இன்று மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் : புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை

24 June 2021, 12:58 pm
Cm stalin - updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கூடுகிறது.

16வது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் கூட்டத் தொடர் கடந்த 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது, இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உரை நிகழ்த்தினார். ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் உரையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

Views: - 172

0

0