பாதிப்பு 759… குணமடைந்தவர்கள் 363… பலி 100-ஐ கடந்தது..! இது இன்றைய கொரோனா நிலவரம்!!

23 May 2020, 6:27 pm
Corona_Treatement_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கொத்து கொத்தாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்திருப்பதால், மொத்த பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் மட்டும் 363 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம், இதுவரையில் மொத்தம் 7,491 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply