நாளைக்கு கிராம சபைக் கூட்டம் எல்லாம் கிடையாது : தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

25 January 2021, 4:45 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : குடியரசு தினத்தையொட்டி நாளை நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் குடியரசு தினம், (ஜன.,26), உழைப்பாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.,15), காந்தி ஜெயந்தி (அக்.,2) ஆகிய தினங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு, மக்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு காந்தி ஜெயந்திக்கு நடப்பதாக இருந்த கிராம சபைக் கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : – கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0