மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்தது டார்ச் லைட்: கமல்ஹாசன் ட்வீட்..!!

15 January 2021, 6:37 pm
Kamal- Updatenews360
Quick Share

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கியது. கமல் ஹாசன் மக்களவை தேர்தலில்போது பயன்படுத்தி பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்க கேட்டிருந்தார்.

புதுச்சேரிக்கு மட்டும் மக்கள் நீதி மையத்திற்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், அந்த சின்னத்தை தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்! ‘ என்று பதிவிட்டுள்ளார்.