பெண்களை தொடர்ந்து திருநங்கையருக்கு இலவச பேருந்து பயணம் : முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலனை..!!

8 May 2021, 12:09 pm
cm stalin - updatenews360
Quick Share

சென்னை : பெண்களை போலவே நகரப் பேருந்துகளில் திருநங்கைகளும் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சாதாரண கட்டணமுடைய நகரப் பேருந்துகளில் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் உட்பட அனைத்து மகளிருக்கும் கட்டணம் வசூலிப்படமாட்டாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும் இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஏற்படும் இழப்பை மானியமாக கொடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் காலை முதலே பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, பெண்களுடன், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும் என சமூக வலைதளத்தின் மூலம் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.

பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.

Views: - 190

0

0