இனி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போக்குவரத்திற்கு அனுமதி : கூடுதல் தளர்வில் முக்கிய அம்சங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2021, 7:20 pm
TN Kerala Bus-Updatenews360
Quick Share

தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு – கேரளா இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தினாலும் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

இதைத்தவிர கடைகளில் நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி இருக்க வேண்டும், அவைரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பொது அறிவிப்புகளை முதலமைச்சர் மீண்டும் நினைவூட்டியுள்ளார்.

Views: - 187

0

0