3 மணி நேர புரோகிராம்..! 100 கோடி செலவு…! டிரம்பின் குஜராத் பயணம் சொல்லும் சேதி..!

15 February 2020, 5:10 pm
Quick Share

அகமதாபாத்: குஜராத் வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணத்துக்காக 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வரும் 24ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வருகை தருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த பயணத்தை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.

டிரம்புக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க குஜராத் அரசு அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது. அதற்காக, அகமதாபாதில் செய்யப்படும் முன்னேற்பாடுகள் மற்றும் தூய்மை, அழகுப்படுத்தும் பணிகளுக்காக ரூ.100 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

டிரம்ப் பயணிக்க இருக்கும் சாலைகளை சீரமைக்க 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த தரப்பட்டுள்ளது. போக்குவரத்து 7 முதல் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

6 கோடி ரூபாய் நகரை அழகாக்க, தூய்மைப்படுத்தும் பணிகளுக்காகவும், 4 கோடி கலைநிகழ்ச்சிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இந்த செலவினத் தொகையில் ஒரு சிறு பகுதியை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு இருக்கிறது. எஞ்சிய தொகை மாநில அரசே செலவிடுகிறது,

பணிகளை மேற்கொள்ளவும், செலவினத் தொகையை வெளியிடவும், குஜராத் மாநில அரசு அனைத்துத் துறைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply