“தோல்வியை ஒத்துக்கோங்க, ப்ளீஸ்“ : டிரம்பிடம் வலியுறுத்தும் மனைவி!!

9 November 2020, 11:34 am
Trump Wife - Updatenews360
Quick Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டிரம்பிடம் தோல்வியை ஏற்க கோரி அவரது மனைவி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாகி அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகினர். இந்த நிலையில் முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்ததும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்.

தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்பிடம் அவர் மனைவி மெலனியா வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தியை வெளியிட்டுள்ளது. வழக்கமாக பல விவகாரங்களில் மெலனியா, டிரம்பிடம் தனிமையில் தான் கூறுவார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

Melania Trump Started Following Barack Obama on Twitter Before Stormy  Daniels Controversy

மேலும் தோல்வி ஒப்புக்கொள்ளாத டரம்பிடம் அரவது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே டிரம்பின் மருமகனும், அரசியல் ஆலோசகருமான ஜாரேட் குஷ்னரும் இதே கோரிக்கையை டிரம்பிடம் வைத்துள்ளார்.

யார் கூறினாலும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் உள்ள டிரம்ப், தனது மனைவி கூறியுள்ளதால் தோல்வியை ஒப்புக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 28

0

0