ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் : முதலமைச்சரிடம் இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல்

14 May 2021, 2:41 pm
tuticorin encounter - updatenews360
Quick Share

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது, வன்முறை ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த தடியடி நடத்திய போலீசார், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினிடம், விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை விசாரணை ஆணையர் அருணா ஜெகதீசன் இன்று தாக்கல் செய்தார்.

Views: - 123

0

0